Sunday, November 14, 2010

புதிய யுகம் படைப்போம்

வேதனை கண்ணீர்
விழிவிட்டு விரட்டு
சோதனை யுகம்வெள்ள
நம்பிக்கை திரட்டு.
...
காதலெனும் போதை விளக்கு
கனவுகளை கரை ஒதுக்கு
வியர்வைத்துளி விருந்தாக்கு
விதிஎன்பதை புறம்தாக்கு

விழுந்துவிட்டபோதும் - நீ
வீழ்ந்து விடவில்லை
எழுந்துவிடமுடியும் - உன்
முயற்சிக்கு இணை இல்லை

பெண்மையை மதியாத
பேதைமை ஒழித்திடு
மனிதம் மதியாத
மதங்களை தீயிடு - அந்த

தீப்பந்தம் எடுத்து
என்னோடு புறப்படு
புதிய யுகம் படைப்போர்
வழியெங்கும் ஒளிசெய்வோம்.

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language