Wednesday, November 14, 2012

கனவு


இரண்டு இமைகளும் 
இதழ்பதித் ததனால்....
இரவு என்றொரு
மலர் மலர்ந்ததினால்....
மனமெனும் வலைக்குள் 
நீ விழுந்ததினால்.......
நினைவுகள் நிஜங்களின் 
வேர் அருத்ததினால்.....
என் கரங்களின் அணைப்பில் 
நீ இருந்ததினால்.....
இதை கனவென்று உணர்ந்தாலும்
கவிதையாய் மலர்ந்தேன்

Monday, October 22, 2012

வாழ்க்கை

தேடி தேடி தொலைத்துவிட்டோம் ....
தேடலின் முடிவில் தொலைந்தே போனோம்....
தேடும் பொருள் எது அறிவோமா...
தேடலின் தேவையும் நிஜம்தானா...

என்றோ தொலைத்தோம்...  என்று கிடைக்குமோ...
தொலைத்தோம் என்பதும் நிஜம்தானா...?!
கிடைக்கும் என்பதும் நம்பிக்கையா - இல்லை
விழித்த நிலையில் நம் கனவுகளா...

எதனை தேடி ஓடுகின்றோம்...
எதற்காகத்தான் வாழுகின்றோம்.
வாழ்க்கை என்பதன் பொருள் என்ன...
வாழுதல் என்பதன் நிலை என்ன...

பணம், மனம், இனம் - இது வாழ்வா...
தினம்... தினம்...தினம்...இது வாழ்வா ...
தேடி ஓடாமல் நில்லுங்கள்....
வாழ்ந்தவர் இருந்தால் சொல்லுங்கள்...

Saturday, September 3, 2011

பறை - தமிழர்களின் பெருமித அடையாளம்

                  அனைவருக்கும் வணக்கம், சிலநாட்களுக்கு பிறகு ஒரு பதிவு எழுதலாம்னு உட்கார்ந்த ... எங்க பார்த்தாலும் எல்லா திசையிலும் எல்லா நிகழ்வுகளிலும் அரசியல் கலந்து இருந்தது. அதனால சமீபத்துல எனக்கு என் நண்பர் ஒரு இ - மெயில் அனுப்பி இருந்தார். அதைதான் நான் உங்களுக்கு இப்போ ஒரு பதிவா தரபோறேன்.

                     எ
ல்லாத் திசைகளிலும் தப்பிசை கேட்கிறது ரெட்டிப்பாளையம் காற்றில்! 'பறை' என்னும் ஆதித் தமிழ்க் கலைக்கு நவீன உலகில் மரியாதை பெற்றுத் தந்த கிராமம், தஞ்சாவூர் அருகே இருக்கும் ரெட்டிப்பாளையம். உச்சி வெயில் உடம்பில் இறங்கும் நேரத்திலும்
ஒத்திகை சத்தம் காற்றைக் கிழிக்கிறது!


                      வீரசோழ தப்பாட்டக் குழு, சலங்கை ஒலி தப்பாட்டக் குழு, ஜான் பீட்டர் தப்பாட்டக் குழு, சங்கர் கோமதி தப்பாட்டக் குழு, மதியழகன் தப்பாட்டக் குழு என ரெட்டிப்பாளையம் முழுக்க நிறைந்திருக்கின்றன தப்பாட்டக் குழுக்கள். ஒரு குழுவுக்கு சுமார் 12 கலைஞர்கள். அத்தனை பேரும் தப்பிசையை முறையாகப் பயின்றவர்கள். அவர்களின் பேச்சும், உடல் அசைவுமே இசையாக வெளிப்படுகிறது.


                  "எங்களை சாதிரீதியா அடிமைப்படுத்தவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பறையும் ஒரு காரணமா இருக்கு. ஆனா, நாங்க இதை அடிமைச் சின்னமா நினைக்கலை. அடையாளமாத்தான் நினைக்கிறோம். பறை என்பது எங்கள் உணர்வோடு, உயிரோடு கலந்திருக்கு. தோள்பட்டையில் பறையை மாட்டிக்கிட்டு குச்சியை எடுத்து அடிக்க ஆரம்பிச்சா, உலகமே மறந்துடும். எல்லாரும்தான் படிக்கிறாங்க. ஆனா, எல்லாராலயும் கலைஞனாயிட முடியாது"- பெருமிதத்துடன் பேசுகிறார் பழனியப்பன். 'பறை என்பது சாவுக்கு இசைக்கப்படும் கருவி' என்ற நிலையை மாற்றி, அதைத் தங்களின் சாதிய விடுதலைக்கான அடையாளமாக மாற்றியதில், ரெட்டிப்பாளையத்தின் பங்கு அதிகம். ஆனால், அது அவ்வளவு
எளிதாக நடந்துவிடவில்லை.

               "எங்களை யாரும் மனுஷனாவே மதிக்கலை... அப்புறம் எப்படிக் கலைஞனா மதிப்பாங்க? 'சாவுக்கு அடிக்கிறவனுங்க தானே'ன்னு இழிவாத்தான் பார்த்தாங்க. எப்போ கூப்பிட்டாலும், பதறி ஓடணும். அவங்களாப் பார்த்து கொடுக்குற காசை, மறு பேச்சு இல்லாம வாங்கிக்கணும். கேவலமாத் திட்டினாலும் பொறுத்துக்கணும். பல ஊர்களில் காரணமே இல்லாம அடிப் பாங்க. சின்னப் பையன்கூட, 'வாடா, போடா'ன்னு அதிகாரம் பண்ணுவான். ஒண்ணும் பண்ண முடியாது. இந்தப் பறை எங்க கிட்ட இருக்குறதுனாலதான் இந்தக் கலை அவமானப்படுதா, இல்லை... இந்த தப்பாலதான் நாங்க அவமானப்படுறமான்னு மனம் நொந்துபோவோம். இதுக்கு மேலயும் இந்த நிலை நீடிக்கக் கூடாது... என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சோம்" - ரெட்டிப்பாளையத்தின் இந்த மாற்றத்தைத் தொடங்கிவைத்த வீரசோழ தப்பாட்டக் குழுவின் தலைவர் ரெங்கராஜன் உற்சாகத்துடன் பேசுகிறார்.


           "பிரமிக்கவெச்சா மட்டும்தான் இந்தக் கலைக்கு மரியாதை கிடைக்கும் என்பதைப் புரிஞ்சுக் கிட்டோம். இளைஞர்களை ஒருங்கிணைத்து 'தப்பு இசைக்கப் போகும்போது எல்லாரும் துவைத்த சுத்தமான சீருடைதான் அணியணும். குழுவாகத்தான் போகணும். மது அருந்தி இருந்தால், அபராதம்' இப்படி எங்களுக்கு நாங்களே பல கட்டுப்பாடுகளை விதிச்சுக்கிட்டோம். தப்பு இசைக்கக் கூப்பிடும் போது, முன்கூட்டியே சம்பளத்தைப் பேசிடுவோம். யாராவது இழிவாப் பேசினா, பாதியிலேயே கிளம்பி வந்துடுவோம். இதனால, அப்போ எங்க ஊரில் சாதிக் கலவரமே வந்துச்சு. ஆனால், நாங்க உறுதியா இருந்து ஜெயிச்சோம்.


             ஓர் ஒழுங்கு இல்லாம விருப்பம்போல ஆடிட்டு இருந்த தப்பாட்டக் கலைஞர்களுக்கு ஒரே தாள நயத்தோடும், காலடிச் சுவடோடும், உடல் அசைவுகளோடும் ஆடுவதற்குப் பயிற்சி கொடுத்தோம். மெள்ள மெள்ள எங்களோட தப்பிசைக் கச்சேரிக்கும் தனிப்பட்ட ரசிகர்களே உருவாக ஆரம்பிச் சாங்க. வெறும் சாவுக்கு அடிக்கிற கருவியா இருந்த பறையை, திருமணத்துக்கும், திருவிழாவுக்கும், திறப்பு விழாவுக்கும் அடிக்கிறதா மாற்றினோம்.


          சென்னையில் ஐயருங்க எல்லாம் சேர்ந்து நாடகம் போடுவாங்களே... அந்த சங்கீத சபாவுல அந்தப் பக்கம் பரத நாட்டியமும், இந்தப் பக்கம் எங்களோட தப்பாட்டமும் ஒரே நேரத்துல நடந்துச்சு. ஒரு போலீஸ் டி.ஐ.ஜி. தன்னோட பொண்ணு கல்யாணத்துக்கு எங்களைக் கூப்பிட்டு மண மேடைக்குப் பக்கத்துலயே இன்னொரு மேடை போட்டு தப்பிசை இசைக் கச் சொன்னாரு" - கடந்து வந்த பாதை சொல் கிறார் ரெங்கராஜன்.

                ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா என உலகின் பல நாடுகளுக்கு தப்பிசைக்கச் செல்லும் ரெட்டிப்பாளையம் குழுவினர், பல்வேறு சினிமாக்களிலும் இசைத்துள்ளனர். 'நாக்கமுக்க' புகழ் சின்னப்பொண்ணு இந்த ஊர்தான். பறை அடிப்பதில் மிகத் திறமையான பெண்கள் பலரும் கடந்த சில ஆண்டுகளில் இந்த ஊரில் இருந்து உருவாகி உள்ளனர்.


           குறிஞ்சிப் பறை, நெய்தல் பறை, மருதம் பறை என ஐவகைத் திணைகளுக்கும் ஐந்து வகையான பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் குறிப்பிடு கிறது. பக்தி இலக்கியத்திலும் பறை ஒலிக்கிறது.

          வேறு எந்த இசைக் கருவிக்கும் நேராத அநீதி, பறைக்கு நேர்ந்தது. 'பறை' என்ற சொல் நேரடியாக சாதியைக் குறிப்பதால், அதற்கு தப்பு என்ற பெயர் மாற்ற வேண்டி வந்தது. மிக உன்னதமாகப் போற்றப்பட்ட ஒரு கலை, காலப்போக்கில் இழிவானதாக மாற்றப்பட்டதுதான் காலப் பிழை.


           "தெம்மாங்குக் கொட்டு, கல்யாணக் கொட்டு, கோவில் கொட்டு, சாவுக் கொட்டு, சல்லிமாடுக் கொட்டுன்னு இதில் நிறைய வகைகள் இருக்கு. நாற்பதுக்கும் அதிகமான அடவுகள் இருக்கு. சோழமலை, கண்டம், திசரம்னு தாள முறைகளிலும் பல வகைகள் இருக்கு. தப்புதல்னா அடித்தல்னு அர்த்தம். அடித்தலும் ஆட்டமும் சேர்ந்து இருக்குறதுனாலதான் இதைத் தப்பாட்டம்னு சொல்றோம். வேற எந்தக் கலைக்கும் இல்லாத சிறப்பு என்னன்னா, இதில் மட்டும்தான் ஒரே நேரத்தில் ஆடிக்கிட்டே இசைக்கணும். கலைஞனே இசைக் கருவியை உருவாக்குறதும் இதுலதான்.


             நாங்க இந்த தப்புக்கட்டையைத் தெய்வமாத் தான் பார்க்குறோம். ஆனா, போற இடங்களில் எல்லாம் முதலில் இழிவுக்கு ஆளாகுறது இந்த தப்புதான். ஏதோ எங்க ஊரில் போராடி, கொஞ்சம் சுயமரியாதையோடு வாழப் பழகி இருக்கோம். ஆனா, மற்ற ஊர்களோட நிலைமை இன்னும் அப்படியேதானே இருக்கு? பல ஊர் களில் தப்படிக்கப்போற இடத்தில் தப்பிசைக் கலைஞர்கள் தாக்கப்படுறதும், பறையை அரிவாளால் கொத்தி ஓட்டை போடுறதும் இப்பவும் நடந்துக்கிட்டுதான் இருக்கு" என்று யதார்த்தம் பேசுகிறார் தப்பிசைக் கலைஞர் ஜெய்சங்கர்.

பறையில் படிந்திருக்கும் சாதிக் கறையைத் துடைத்தெறிந்து, அந்த ஆதிக் கலையை தமிழின், தமிழர்களின் பெருமித அடையாளமாகத்  தூக்கிப்பிடிக்க வேண்டியது நமது கடமை!

நன்றி திருவாளர் செல்வம் 

Monday, January 17, 2011

பொங்கல் வாழ்த்து

தயவுசெய்து மறக்காமல் கருத்துரை இட்டு செல்லவும். அது என்னை மேலும் தரப்படுத்திக்கொள்ள உதவும்.







Saturday, January 1, 2011

விருந்தினரே(2011) வருக...





















அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களை வாக்குகளாய் அளிக்கவும். நன்றி. 

புத்தாண்டே வருக! வருக!

Friday, December 17, 2010

மெய்தீண்டும் மை விழியே . . .

கனவுகண்டேன் உன் கைபிடிக்க
காத்திருந்தேன் உனை மெய்யணைக்க
இருவிழிகள் பூத்திருந்தேன் இனியவளே- உனை
இதயமெங்கும் நிறைத்து வைக்க.

நீ நடந்துவரும் பாதையெங்கும்
மலர்தூவி வழிசெய்வேன் - உன்
நடையழகை நான் ரசித்து
இரு விழிகள் வியர்த்திருப்பேன்.

உன் ஓரவிழி பார்வைக்காக
ஓராயிரம்முறை வலம்வருவேன்
சுற்றம் மறந்து கட்டித்தழுவி -உலகில்
முற்றும் நீயென முடிவெடுப்பேன்.

கட்டிப் பிடித்திருப்பேன் - உனை
கரம்பிடித்து அழைத்துச்செல்வேன்.
அங்கமெங்கும் இதழ்பதித்து
அகிலம் நான் மறப்பேன்.

விழிகளால் ஜாடை செய்வேன்
மொழிகளால் மௌனம் செய்வேன் - நீ
மறுத்தாலும் நிறுத்தாமல்
சத்தமில்லா முத்தம் செய்வேன்.

உனை கட்டிலில் கிடத்திவிட்டு
சாய்ந்தனைத்து படுத்திருப்பேன் -
ஆயுள்வரை உன்னோடு
ஒவ்வொன்றாய் கனாக்காண்பேன்.

இரவுகளில் உன்னோடு
உறங்காமல் விழித்திருப்பேன் - உன்
உறவுகளில் ஒன்றாகி
உயிர்வரைக்கும் கலந்திருப்பேன்.


தொட்டுவிடும் தூரத்தில் நீ - உனை
தொடமுடியாத துக்கத்தில் நான்.

எட்டாம் மாதத்து இளம்பிறையே
பத்தாம்
மாதத்தில் பௌர்ணமி நீ...



என் மெய்தீண்டும் மைவிழியே - என்
மெய்தாண்டி
வரும்நாள் எதுவோ... !

என் உயிர் மெய் குழைத்த ஓவியமே...
என் உயிரும் மெய்யும் உனக்கே ! உனக்கே !




.

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language