Monday, October 22, 2012

வாழ்க்கை

தேடி தேடி தொலைத்துவிட்டோம் ....
தேடலின் முடிவில் தொலைந்தே போனோம்....
தேடும் பொருள் எது அறிவோமா...
தேடலின் தேவையும் நிஜம்தானா...

என்றோ தொலைத்தோம்...  என்று கிடைக்குமோ...
தொலைத்தோம் என்பதும் நிஜம்தானா...?!
கிடைக்கும் என்பதும் நம்பிக்கையா - இல்லை
விழித்த நிலையில் நம் கனவுகளா...

எதனை தேடி ஓடுகின்றோம்...
எதற்காகத்தான் வாழுகின்றோம்.
வாழ்க்கை என்பதன் பொருள் என்ன...
வாழுதல் என்பதன் நிலை என்ன...

பணம், மனம், இனம் - இது வாழ்வா...
தினம்... தினம்...தினம்...இது வாழ்வா ...
தேடி ஓடாமல் நில்லுங்கள்....
வாழ்ந்தவர் இருந்தால் சொல்லுங்கள்...

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... உண்மை வரிகள்... (இன்றைய நிலை)

(http://velang.blogspot.com/2012/10/blog-post_25.html) மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

Post a Comment

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language