கனவுகண்டேன் உன் கைபிடிக்க
காத்திருந்தேன் உனை மெய்யணைக்க
இருவிழிகள் பூத்திருந்தேன் இனியவளே- உனை
இதயமெங்கும் நிறைத்து வைக்க.
நீ நடந்துவரும் பாதையெங்கும்
மலர்தூவி வழிசெய்வேன் - உன்
நடையழகை நான் ரசித்து
இரு விழிகள் வியர்த்திருப்பேன்.
உன் ஓரவிழி பார்வைக்காக
ஓராயிரம்முறை வலம்வருவேன்
சுற்றம் மறந்து கட்டித்தழுவி -உலகில்
முற்றும் நீயென முடிவெடுப்பேன்.
கட்டிப் பிடித்திருப்பேன் - உனை
கரம்பிடித்து அழைத்துச்செல்வேன்.
அங்கமெங்கும் இதழ்பதித்து
அகிலம் நான் மறப்பேன்.
விழிகளால் ஜாடை செய்வேன்
மொழிகளால் மௌனம் செய்வேன் - நீ
மறுத்தாலும் நிறுத்தாமல்
சத்தமில்லா முத்தம் செய்வேன்.
உனை கட்டிலில் கிடத்திவிட்டு
சாய்ந்தனைத்து படுத்திருப்பேன் -
ஆயுள்வரை உன்னோடு
ஒவ்வொன்றாய் கனாக்காண்பேன்.
இரவுகளில் உன்னோடு
உறங்காமல் விழித்திருப்பேன் - உன்
உறவுகளில் ஒன்றாகி
உயிர்வரைக்கும் கலந்திருப்பேன்.
தொட்டுவிடும் தூரத்தில் நீ - உனை
தொடமுடியாத துக்கத்தில் நான்.
எட்டாம் மாதத்து இளம்பிறையே
பத்தாம் மாதத்தில் பௌர்ணமி நீ...
என் மெய்தீண்டும் மைவிழியே - என்
மெய்தாண்டி வரும்நாள் எதுவோ... !
என் உயிர் மெய் குழைத்த ஓவியமே...
என் உயிரும் மெய்யும் உனக்கே ! உனக்கே !
.
skip to main |
skip to sidebar
உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language
நேரம் சரியாக ...
About Me
Blog Archive
Powered by Blogger.
Followers
ONLINE REDIO FOR YOUR CHOICE...
Title
17டிசம்பர் 2010 முதல் நித்தம் நித்தம் மொத்தம்
Labels
- Greetings (1)
- Guest (1)
- Happy New Year (2)
- Happy Pongal (1)
- kavithai (1)
- poam (1)
- puthiya yukam padaippom (1)
- Tamil New Year (1)
- Welcome (1)
- Wishes (1)
- அம்மா (1)
- கவிதை (2)
- காதல் (1)
- சாவுக் கொட்டு+இசை+தமிழ்க் கலை+தப்பிசை+பறை+ (1)
- தமிழ் (1)
- தாய் (1)
- புதிய யுகம் படைப்போம் (1)
- புத்தாண்டே வருக (1)
- பொங்கல் வாழ்த்து (1)
- விருந்தினரே(2011) வருக... (1)
- ஸ்ரீ+விஷ்ணு+சஹஸ்ரநாமம்+தமிழில்+நமோ+ஓம் (1)
20 comments:
கவிதை ரொம்ப நல்லா இருக்கு..!!
ஆயிரம் கரம கொண்டு தட்டிய ஓசை இக்கவிதைக்கு பரிசு ராஜ்குமார்..
வாழ்வின் ஆதாரம் கவிதை என்பேன். இதுவோ வாழாதலின் ஆதாரம் ராஜ்குமார். இதயத்தில் நிறைய வலி சுமந்து நடப்பனை இன்னும் வலிக்க வைத்து விட்டது உங்களின் கவிதை..
வெறும் வார்த்தை இல்லை இது அருமை என்று சொல்ல. இறைவன் இப் பிரிவின் வலியை யாருக்கும் கொடுக்காமல் இருக்க நம்மை இயக்கட்டுமே..
வித்யாசாகர்
Thankyou Mr.Paul.
மிக்க நன்றிகள் திருவாளர் வித்யாசாகர் அவர்களே.... தங்களை போன்றோரின் வாழ்த்துதல் மட்டுமே என் சிந்தனைகளின் ஊற்று. நன்றிகள்
மிக அருமை ராஜ்குமார் .
அழகான கவிதைநடை எனக்கு மிகவும் பிடித்தது. பாராட்டுக்கள்!!!
நன்றி திருவாளர் "தமிழ்க்கிறுக்கன் நடாசிவா" ஐயா அவர்களே. தங்கலைப்போன்றோரின் இதுபோன்ற ஊக்க உரைகள் என்னையும் என் பேனாவையும் வளப்படுத்தும்.
பிரிவு மனிதனை பாடாய் படுத்தும் அந்த பிரிவையும் தமிழால் வரையும்போது உணர்வின் உச்சத்திற்கே போய்விடுவோம். நீங்கள் அதை சரியாய் செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
very nice and real poet rajkumar.. write and update more poets.. varigal miga alagaai ullana..
Thanks My dear Friend. Wishes only the greatest booster for everything. The same time "BHARATHI" Has wish my poam. That is the point of my Goal.
Thanks again Bharathi.
கவிதையில் பின்றீங்களே! அழகு - அருமை!
(power soap .......கொடுக்க போவதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே கவிதை நல்லா இருக்குங்க.... )
Followers Widget இணைக்கவில்லையா?
நான் புதியவன். தங்களைபோன்ற அனுபவசாலிகள் அப்போதைக்கப்போது வழிநடத்தினால் சரிதான்.
இப்போதான் இணைக்கபோறேன்.
நன்றிகள் பல... நண்பி...
Hi Chitra I Already added Followers widget. Find once again in Blog edge. Thankyou.
கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு சார்
என்னைப் போன்றவருக்கு
இளம் கவிங்கருக்கு உங்கள் கவிதைப்
பெட்டகம் நல்ல ஒரு வழிகாட்டி
நன்றிகள் பல... ஆனாலும் நானும் புதியவன் என்பதே உண்மை....
மிகவும் அருமையான அழகான வரிகளின் தேர்வுகள்
வலிகளைகூட வலுவாகச்சொல்லும்
வார்த்தை நயங்கள் . பாராட்டுக்கள்.
இக்கவிதை வெற்றிப்பெற வாழ்த்துக்கள் சகோ..
wonderful lyrics..
Tasty appetite
Thanks Jey...
நீங்கள் சினிமாவிற்கு பாட்டு எழுதினால் ஹிட் ஆகும் என நினைக்கிறேன்
அப்படி ஒருவாய்ப்பு இருந்தால் என்னை சிபாரிசு செய்யவும். மீனாவை பற்றியும் ஒரு கவிதை எழுதுவேன்...
Post a Comment