Friday, January 15, 2010

நாங்களும் பொங்கலும்...



பழையன கழித்தோம் புதியன புகுதற்கு....போகியாய்.

புகுந்த புதியன இனிதாய் இருக்க கரும்போடு ருசித்தோம் பொங்கலை...

இளையவர் பெரியவர் யாவரும் கூடி நம் வாழ்வுக்கு தோள்கொடுத்த

நான்கு கை நாயகனுக்கு நன்றிக்கடன் செய்கின்றோம்.... மாட்டுபொங்கல்.

காளையும் காளையரும் கலம்கூடி அவரவர் பலம்காட்டும் விளையாட்டாய் .... ஜல்லிக்கட்டு.

புத்தாடை அணிந்து... நகர்வலம் வந்து... தோழமை கூட்டி .... எத்தனை சுவர்க்கம் எங்கள் மண்ணிலே....

இத்தனை இன்பமும், சத்தியம் செய்யுங்கள் ... பட்டிணம் தருமா.......?

1 comments:

அண்ணாமலையான் said...

கஷ்டம்தான்...

Post a Comment

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language